(புதியவன்)
உகண்டா தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக நாடாளுமன்ற ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட்டின் பயிற்சி உள்ளடங்கிய இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை உகண்டா கிரிக்கெட் அணியினர் மேற்கொள்ள ஏற்பாடு செய்தமைக்கு இச்சந்திப்பின் போது சபாநாயகருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தத்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 6 வரை உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 27 ஆவது மாநாட்டில் சபாநாயகர் கலந்து கொண்டபோது, சபாநாயகரிடம் உகண்டா கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய உகண்டா தேசிய அணிக்கு இந்த இலங்கை சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.