ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் வசூல் சாதனை படைத்தபடம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது.
இந்தியன் 2 படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தாகவும் கிராபிக்ஸ் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படவெளியீடு சுதந்திர தினத்துக்கு தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.