அண்மைக்காலமாக இரண்டு மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதும் ஹீரோக்கள் வில்லன்களாக நடிப்பதும் நடைமுறையாகி விட்டது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி இணைந்து நடிக்கவுள்ளனர்.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் 1987இல் வெளியான நாயகன் படம் பெரிய வெற்றி பெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. நாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.