ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாது சிறந்தவொரு நடிகராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒருவர்.
அண்மையில் இவரது ”அடியே” படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்று பேசும்போது "நான் நடித்துள்ள அடியே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வியாபார ரீதியாகவும் ஹிட் படமாக மாறி இருக்கிறது. பணமுதலீடு செய்து படம் எடுக்கும் போது அதில் இருந்து இலாபம் எடுப்பது இன்றைய சூழ்நிலையில் மிகக் கஷ்டம்.
இந்த நிலையில் அடியே படம் இலாப படமாக மாறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசியாக எனது நடிப்பில் வந்துள்ள பேச்சிலர், செல்பி, அடியே ஆகிய மூன்று படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு இலாபம் கொடுத்து உள்ளன.
நாம் நடிக்கும் படங்கள் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். அதை தான் நான் மிகவும் விரும்புகின்றேன். அந்த வகையில் எனது படங்கள் இலாபம் ஈட்டி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.