பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மகள் மீரா, சென்னையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தன்னுடைய அறையில் உறங்க சென்றுள்ளார்.
இன்று அதிகாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.