(புதியவன்)
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட வழிகாட்டலில் மனிதவள மற்றும் பாதுகாப்பு பணிமனையின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட வேலைவாய்ப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் (17) இன்று இடம்பெற்றது.
இந்த கல்வி கண்காட்சியில், உயர்கல்வி பாட வாய்ப்புகள், வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள், உயர் கல்வி உதவித்தொகை, உயர்கல்வி கடன் வசதிகள், தொழில் வழிகாட்டுதல் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.பி.கே.போதிமன்னா தலைமையில் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.