(புதியவன்)
நுவரெலியாவில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (31) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், தீ பரவலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கம் போல உணவகத்தில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தபோது சமையலறையில் இருந்து புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.