புதியவன்
நடிகை அபர்ணா தாஸுக்கும் 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் தீபக் பரம்போலுக்கும் இம்மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஞான் பிரகாஷன்' படம் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ்.
அடுத்து அவர் 'மனோஹரம்' படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் நடித்த 'பீஸ்ட்', கவினின் 'டாடா' படங்கள் மூலம் தமிழ் சினிமா இரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இவருக்கும் மலையாள நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்' படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் தீபக் பரம்போல். இவர் அண்மையில் வெளியான 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்தில் சுதி கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
அபர்ணாவும், தீபக்கும் இணைந்து 'மனோஹரம்' படத்தில் நடித்திருந்தனர். இருவரின் காதலுக்கு ஆரம்பப் புள்ளியாக இப்படம் அமைந்தது.
இந்நிலையில், பல வருடங்களாக காதலித்து வந்தவர்களின் திருமணம் இம்மாதம் 24 ஆம் திகதி கேரளாவின் வடக்கஞ்சேரியில் நடைபெறவுள்ளது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.