மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு மேல­திக நிதி இந்த வரு­டம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை

Get real time updates directly on you device, subscribe now.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் செயற்­றிட்­டத்­துக்­காக கடந்த வரு­டம் ஒதுக்­கப்­பட்ட மேல­தி­க­மான 2 மில்­லி­யன் ரூபா நிதி நடப்பு வரு­டத்­தில் ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்று மாகாண முதன்மை பிர­திச் செய­ல­ரின் நிதிப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஒவ்வொருவருடமும் அந்த வரு­டத்­தில் மேற்­கொள்ள வேண்­டிய செயற்­றிட்­டங்­க­ளுக்­காக 6 மில்­லி­யன் ரூபா பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நன்­கொடை நிதி­யாக ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று சபை உறுப்­பி­னர்­க­ளின் முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யி­லான செயற்­றிட்­டங்­களை மேற்­கொள்­ளு­வ­தற்கு கடந்த வரு­டம் 2 மில்­லி­யன் மேல­தி­க­மாக ஒதுக்­கப்­பட்­டது.

இது மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதி­யாக வழங்­கப்­பட்­டது. இந்த மேல­திக நிதியே இந்த முறை ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

ஒரு அமைச்­சின் கீழ் ஒரு செயற்றிட்­டத்தை மேற்­கொள்­ளும்­போது அதற்­கான ஆலோ­சனை குழு கூட்­டம் நடை­பெ­றும்.

இதன்­போது சபை உறுப்­பி­னர்­கள் முன்­னு ­ரிமை அடிப்­ப­டை­யில் செய்ய வேண்­டிய வேலை­களை அல்­லது அவ­ச­ர­மான வேலை­களை அந்த ஆலோ­சனை குழு­வுக்கு தெரி­விப்­ப­தன் மூலம் அந்த அமைச்­சுக்கு உரிய மாகாண குறித்­தொ­துக்­கப் பட்ட நிதி­யில் உறுப்­பி­ன­ரின் செயற்றிட்­டத்­தை­ குறித்த அமைச்சு உள்­வாங்க முடி­யும்.

ஆகவே அவர்­க­ளுக்கு மேல­திக ஒதுக்­கீடு தேவை­யில்லை. இது­தான் மாகாண சபை­யின் நடை­மு­றை­யாக இருக்­கி­றது. உதா­ர­ண­மாக ஒரு பிர­தே­சத்­தில் பாட­சாலை சார்­பான அபி­வி­ருத்தி வேலை செய்ய வேண்­டும் என்று சபை உறுப்­பி­ன­ரால் இனம் காணப்­பட்­டால் கல்வி அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்­டில் மேற்­கொள்ள வேண்­டிய ஆலோ­சனை கூட்­டத்­தில் தெரி­விப்­ப­தன் மூலம் அந்த வேலைத்­திட்­டத்தை கல்வி அமைச்­சின் ஊடாக மேற்­கொள்ள முடி­யும்.

இதனை கருத்­தில் கொண்டே இந்த முறை மேல­திக ஒதுக்­கீ­டாக 2 மில்­லி­யன் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of