காணா­மல் ஆக்­கப்­பட்டோரை ஒப்படைப்போமென எந்தவொரு உத்தரவாதமும் வழங்க முடியாது!!

Get real time updates directly on you device, subscribe now.

காணா­மல் ஆக்­கப்­பட்டோ ரின் உறவுக­ளைக் கொண்டு வந்து உங்­க­ளிடம் நான் ஒப்­ப­டைப் பேன் என்று என்­னால் எந்த உத் த­ர­வா­த­மும் வழங்க முடி­யாது. இந்­தப் பணி­ய கத்­தின் ஊடாக உச்­ச­பட்­ச­மாக எதைச் செய்ய முடி யுமோ அதைச் செய்­வேன்.காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் கடந்த காலத்­தில் நடத் தப்­பட்ட விதம் தொடர்­பில் மன் னிப்­புக் கோரு­கிறேன்.

இவ்வாறு காணா­மல் ஆக்­கப்­பட் டோர் பணி­ய­கத்­தின் ஆணை­யா ளர் சாலிய பீரிஸ் தெரி­வித்­தார். மன்­னார் மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­களை நேற்று நேரில் சந்­தித்து உரை­யாற்றி­ய­போதே மேற்­கண்­ட வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்­தப் பணி­ய­கம் நிரந்­த­ர­மா­னது. இந்த ஆணை­யா­ளர்­கள் 3 ஆண்­டு­கள்­தான் இருப்­பார்­கள். அந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு இடை­யில் எவற்றை எம்­மால் செய்ய முடி­யுமோ அவற்றை நிச்­ச­யம் செய்­வோம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் அனு­ப­வித்து வரு­கின்ற துன்ப துய­ரங்­களை நேர­டி­யாக உணர்ந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இந்த மக்­கள் பல்­வேறு இடர்­க­ளுக்கு மத்­தி­யி­லும் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னார்­கள்– என்­றார்.

இதன் பின்­னர் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் ஆணை­யா­ளர் சாலிய பீரி­ஸி­டம், தென்­னா­பி­ரிக்­கா­வில் பெரும்­பான்மை இனத்­துக்கு எதி­ராக செயற்­பட்ட சிறு­பான்மை இனத்தை பெரும்­பான்மை இனமே விசா­ரனை மேற்­கொண்­ட­தில் வெற்­றி­ய­ளித்­தது. ஆனால் இங்கு சிறு­பான்மை இனத்­துக்கு எதி­ராக பெரும்­பான்மை இனம் விசா­ரனை மேற்­கொள்­கின்­றது. இங்கு வெற்­றி­ய­ளிக்­கப்­ப­டும் என்று கரு­து­கின்­றீர்­களா? என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

‘நாம் இனத்தை மதத்­தைக் கொண்டு இங்கு செயற்­ப­ட­வில்லை. நாம் அனை­வ­ரும் இலங்­கை­யர் என்ற எண்­ணத்­து­டனே செயல்­ப­டு­கின்­றோம். ஆரம்­பத்­தி­லி­ருந்து ஆணைக்­கு­ழுவை நோக்­கி­னால் உங்­க­ளுக்கு புரி­யும். குறு­கிய நோக்­கம் கொண்டு செயல்­ப­ட­வில்லை. எங்­க­ளுக்கு சட்­டத்­திட்­டங்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதற்­க­மை­யவே நாங்­கள் செயல்­ப­டு­வோம். நாங்­கள் பக்­கச் சார்­பா­கவோ அல்­லது இனம் மதம் பார்த்தோ செயல்­பட போவ­தில்லை. 1987ஆம் ஆண்­டி­லி­ருந்து 1989ஆம் ஆண்டு வரை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் காணா­மற் போயி­ருக்­கின்­றார்­கள். அது ஒரு இன­மாக கரு­தப்­பட்­டா­லும் நாங்­கள் அதை ஒரு இனம் என்று பார்க்­காது இது ஒரு தேசிய பிரச்­சனை என்­று­தான் பார்க்­கின்­றோம். எதிர்­கா­லத்­தி­லும் நாங்­கள் இப்­ப­டி­யான கண்­ணோட்­டத்­தில்­தான் செயல்­ப­டு­வோம். எதிர்­கா­லத்­தில் இவ்­வா­றான செயல்­பாடு நட­வா­தி­ருக்­கும் முக­மாக நாம் இலங்­கை­யர் என்ற நிலை­யிலே செயல்­ப­டு­வோம்’ என்று பதி­ல­ளித்­தார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of