கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வத்­துக்கு காணி வழங்க -ஐவர் சம்­ம­த­மாம்!!

Get real time updates directly on you device, subscribe now.

முல்­லைத்­தீவு, கேப்­பா­பி­ல­வில் உள்ள 59.95 ஏக்­கர் காணி­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளில் 5 பேர் தங்­க­ளது காணி­களை இரா­ணு­வ­துக்கு வழங்க சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­னர்.

கேப்­பா­பி­ல­வில் படை­யி­னர் வசம் உள்ள காணி­க­ளின் விடு­விப்­புக்­கா­கப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கும் காணி உரி­மை­யா­ளர்­க­ளின் விருப்­பம் அறி­யும் கூட்­டம் ஒன்று முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது.

கேப்­பா­பு­ல­வில் படை­யி­னர் வசம் உள்ள காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் இரா­ணு­வத்­துக்­குத் தங்­க­ளு­டைய காணி­களை வழங்கி அதற்­கான நட்­ட­ஈ­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்­தக் காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் எழுத்­து­மூ­லம் அவர்­கள் விருப்­பத்­தைப் பெற்­றுக்­கொள்­ளும் வகை­யி­லேயே இந்­தக் கூட்­டம் கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச செய­லக மண்­ட­பத்­தில் உத­விப் பிர­தேச செய­லா­ளர் இ.பிர­தா­பன் தலை­மை­யில் நடை­பெற்­றுள்­ளது. அதில் கரை­து­றைப்­பற்று பிர­தேச காணிப்­ப­குதி அதி­காரி சோ.சேந்­த­னும் கலந்து கொண்­டி­ருந்­தார்.

கேப்­பா­பி­ல­வில் 55 பேருக்கு சொந்­த­மான 59.95 ஏக்­கர் காணி­க­ளுக்கு காணி உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் விருப்­பத்தை எழுத்­து­மூ­லம் தெரி­விக்க வேண்­டும் என்று கூட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டது.
இந்த கூட்­டத்­தில் 37 காணி உரி­மை­யா­ளர்­கள் கலந்­து­கொண்டு தங்­கள் விருப்­பத்தை தெரி­வித்­த­னர்.

இதில் இரண்டு காணி உரி­மை­ளார்­கள் வெளி­நாட்­டில் வாழ்­கின்­ற­னர் எ்னறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளில் பெரு­ம­ள­வா­ன­வர்­கள் தங்­க­ளுக்­குக் காணி­தான் வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர். காணி உரி­மை­யா­ளர்­கள் 5பேர் தங்­க­ளுக்கு காணிக்­கு­ரிய நட்­ட­ஈடு பெற்­றுக் கொள்ள விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்­கள்.

இந்த கூட்­டத்­துக்கு வரு­கை­ த­ரா­த­வர்­க­ளு­டைய விருப்­பங்­களை அறி­வ­தற்கு கிராம சேவ­கர் ஊடாக விண்­ணப்­பங்­க­ளைப் பெற்று நிரப்பி வழங்­கு­மாறு உத­விப் பிர­தேச செய­லா­ளர் பணித்­தார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of