சாவகச்சேரியில் ஒரே நாளில் 20 மாடுகள் வெட்டிச் சரிப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

சாவ­கச்­சேரி நகர சபைக்கு உட்­பட்ட கொல்களத்­தில் 20 மாடு­கள் ஒரே நாளில் நேற்று வெட்­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பில் அந்­தப் பகுதி மக்­கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­னர்.

சாவ­கச்­சேரி நகர சபை­யால் இந்த ஆண்டு குத்­த­தைக்கு வழங்­கப்­பட்ட மாட்­டி­றைச்­சிக் கடை­யில் வழ­மை­யாக ஒரு நாளில், ஒரு மாடு இறைச்­சிக்­காக வெட்­டப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்டு வந்­தது. இந்த நிலை­யில் மாட்­டி­றைச்­சிக் கடை நடத்­து­ப­வர் நோன்­புக் காலம் வரு­வ­தால் தின­மும் பெரு­ம­ளவு மாடு­கள் இறைச்­சிக்­காக வெட்­டு ­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு நகர சபை­யின் தவி­சா­ள­ருக்கு விண்­ணப்­பித்­தார்.

தவி­சா­ள­ரும் பொதுச் சுகா­தார பரி­சோ­த­க­ரின் முன்­னி­லை­யில் கொல்­க­ளத்­தில் இறைச்­சிக்­காக மாடு­களை வெட்­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளார்.

32 மாடு­கள் வெட்­டு­வ­தற்­காக கொல்­க­ளத்­துக்கு நேற்­றுக் கொண்டு வரப்­பட்டுள்­ளன. பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் முன்­னி­லை­யில் 20 மாடு­கள் வெட்­டப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன.

ஒரே நாளில் பெருந்­தொ­கை­யான மாடு­கள் வெட்­டப்­ப­டு­வது தொடர்­பில் அந்­தப் பகுதி மக்­கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­னர். அத்­து­டன் நகர சபை­யின் சில உறுப்­பி­னர்­கள் கொல்­க­ளத்­துக்­குச் சென்று இது தொடர்­பி­லும் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

சம்­ப­வம் தொடர்­பா­கச் சபை­யின் உறுப்­பி­னர்­கள் தவி­சா­ள­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­தை­ய­டுத்து இன்று வியா­ழக்­கி­ழமை சிறப்பு கூட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of