நீரா­டச் சென்ற குளத்­தில்- மூழ்­கிய இளை­ஞன் உயிரிழப்பு-  முள்­ளி­ய­வ­ளை­யில் சோகம்!!

Get real time updates directly on you device, subscribe now.

முள்­ளி­ய­வளை, மதா­வா­ள­சிங்­கன் குளத்­தில் குளிக்­கச் சென்ற இளை­ஞர் ஒரு­வர் மூழ்கி இறந்­துள்­ளார்.

முள்­ளி­ய­வளை, முத­லாம் வட்­டா­ரம் பொன்­ன­க­ரி­யைச் சேர்ந்த இந்­தி­ரன் தகீ­சன் (வயது-–21) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

நேற்­று­முன்­தி­னம் மாலை அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த 6 இளை­ஞர்­கள் குளத்­தில் குளிக்­கச் சென்­றுள்­ள­னர். குளத்­தின் ஆழ­மான பகு­திக்­குச் சென்ற இளை­ஞர் ஒரு­வர் காணா­மல் போயுள்­ளார். அவரை நண்­பர்­கள் தேடி­யுள்­ள­னர். அவ­ரைக் கண்­டு­பி­டிக்க முடி­யாத நிலை­யில் இது தொடர்­பில் முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் அளித்­துள்­ள­னர்.

நேற்று அதி­காலை இளை­ஞ­னின் உடல் குளக்­க­ரை­யில் ஒதுங்­கி­யுள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­வான் மன்ற நீதி­பதி எஸ்.டெனிஸ்­கு­மார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று உட­லைப் பார்­வை­யிட்­டார். உட­ற­கூற்­றுச் சோத­னைக்­குப் பின்­னர் உடல் உற­வி­னர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of