வட – கிழக்கு இணைந்த தாய­கமே -தமி­ழர் பிரச்­சி­னைக்­குத் தீர்­வா­கும்!!

Get real time updates directly on you device, subscribe now.

வடக்கு-–கிழக்கு இணைந்த தாய­கம் தான் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றோம் என்று கிழக்கு தமி­ழர் ஒன்­றி­யத்­தின் இணைப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

மட்­டக்­க­ளப்பு முகத்­து­வா­ரத்­தி­லுள்ள சூழ­லி­யல் கற்­கை­கள் நிலைய மண்­ட­பத்­தில் கிழக்­குத் தமி­ழர் ஒன்­றி­யத்­தின் செயற்­பா­டு­கள் குறித்த ஊடக சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அதில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு இணைப்­பா­ளர்­கள் இவ்­வாறு தெரி­வித்­த­னர்.

‘ கிழக்கு தமி­ழர் ஒன்­றி­யம் கிழக்­குக்கு மாத்­தி­ர­மா­னதோ வடக்­குக் கிழக்கு இணைப்­புக்கு எதி­ரா­ன­தொரு சக்­தியோ அல்ல. நாங்­கள் வடக்கு கிழக்கு இணைந்த தாய­கம்­தான் தமி­ழர்­க­ளின் தீர்வு என்­பதை நாம் ஏற்­றுக் கொள்­கின்­றோம். ஆனால் அது கிடைக்­கப்­பெ­றும் வரை­யில் கிழக்கு மாகா­ணத்­தைக் கிழக்கு மாகா­ண­மாக வைத்­துக் கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் ஏதா­வது நன்­மை­யி­ருக்­கும் என்று கிழக்கு தமி­ழர் ஒன்­றி­யத்­தின் இணைப்­பா­ளர்­க­ளான மூத்த சட்­டத்­த­ரணி த.சிவ­நா­தன் ,செங்­க­தி­ரோன், த.கோபா­ல­கி­ருஸ்­ணன் ஆகி­யோர் தெரி­வித்­த­னர்.

ஊடக சந்­திப்­பில், கிழக்­குத் தமி­ழர் ஒன்­றி­யத்­தின் தலை­வர் பேரா­சி­ரி­யர் மா.செல்­வ­ராஜா, செய­லா­ளர் எந்­திரி வ.பர­ம­கு­ரு­நா­தன், ஊடக இணைப்­பா­ளர் த.ஈஸ்­வ­ர­ராஜா உள்­ளிட்­டோ­ரும் இணைந்­தி­ருந்­த­னர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of