இரா­ணு­வக் கேண­லுக்­காக கண்­க­லங்­கிய மக்­கள் -முல்­லைத்­தீ­வில் சம்­ப­வம்!!

Get real time updates directly on you device, subscribe now.

இரா­ணுவ முகா­மில் கேணல் தர அதி­கா­ரி­யா­கக் கட­மை­யாற்­றிய ஒரு­வர் இட­மாற்­றம் பெற்­றுச் சென்­றதை அடுத்து முகாமை அண்­டிய பகு­தி­யைச் சேர்ந்த சிலர் கண்­ணீர் விட்டு அழுத சம்­ப­வம் வடக்கு மாகா­ணத்­தில் நேற்­றுப் பதி­வா­கி­யுள்­ளது.

இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு, திட்­ட­மிட்ட நில அப­க­ரிப்பு என்று போராட்­டங்­கள் இடம்­பெ­றும் வடக்கு மாகா­ணத்­தில் இவ்­வா­றான சம்­ப­வம் பதி­வா­கி­யமை சமூக வலைத் தளங் களில் நேற்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தது.

போரால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள விஸ்­வமடு இரா­ணுவ முகா­மில் கேணல் தர அதி­கா­ரி­யாகக் கட­மை­யாற்­றிய ரத்­த­ன­பி­ரிய பந்து அம்­பே­புஸ்ஸ முகா­முக்கு இட­மாற்­றம் பெற்­றுச் செல்­கி­றார்.

அவ­ருக்கு அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த சிலர் பிரி­யா­விடை நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர். இந்த நிகழ்­வி­லேயே அவர்­கள் கண்­ணீர் விட்டு அழு­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

குறித்த அதி­காரி கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளுக்­கான சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­துக்­குப் பொறுப்­பாக இருந்­துள்­ளார்.

இத­னால் அவர் அங்­குள்ள பல­ருக்­கும் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளங்­க­ளுக்­குள் அதிக கொடுப்­ப­ன­வு­க­ளு­டன் வேலை­வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றுக் கொடுத்­துள்­ளார். அவ்­வாறு வேலை­வாய்ப்­புக்­க­ளைப் பெற்­ற­வர்­களே குறித்த நிகழ்­வில் கண் கலங்­கி­னர் என்று விசு­வ­மடு மக்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கபே அமைப்­பின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் கீர்த்தி தென்­ன­கோன் நேற்று தனது முகப்­புத்­த ­கத்­தில் பதி­வொன்றை இட்­டுள்­ளார். அந்­தப் பதி­வில்; சிவில் பாது­காப்பு படை­யில் இணைத்­துக் கொள்­ளப்­பட்­டுள்ள விடு­த­லைப் புலி­க­ளின் முன்­னாள் போரா­ளி­கள் மற்­றும் விஸ்­வ­மடு மக்­கள் ஆகி­யோர் கண்­ணீ­ரு­டன் கேர்­ணல் ரத்­த­ன­பி­ரிய பந்­துக்கு பிரி­யா­விடை கொடுத்­துள்­ள­னர் என்று தெரி­வித்­துள்­ளார்.

பாது­காப்­புப் படை­க­ளில் வடக்­கில் உள்ள மக்­களை உண்­மை­யில் நேசிக்­கும் அதி­கா­ரி­கள் இருப்­ப­து­டன், அவர்­களை நேசிக்­கும் மக்­க­ளும் இருக்­கின்­ற­னர் என்­றும் அவர் தனது பதி­வில் தெரி­வித்துள்­ளார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of