மரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு கூட- மாட்டுக்கு இல்லாமல் போய்விட்டதே!!

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு மரத்தை தறித்­துச் சாய்ப்­ப­தற்­கும், வெட்டி வீழ்த்­திப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கும் உரிய கட்­டுப்­பா­டும் கரி­ச­னை­யும் வலு இறுக்­க­மாக இருப்­ப­தற்கு இந்த மண் தலை வணங்­கு­கின்­றது.

அவ்­வாறு வெட்­டப்­ப­டும்­போது, அதற்­குப் பதி­லாக புதிய மரங்­கள் நாட்­டப்­பட வேண்­டு­மென்று அறி­வுத்­தப்­ப­டு­கி­றது. ஆனால் மந்­தை­கள் சரிக்­கப்­ப­டும்­போது, சந்­தை­க­ளும் புதிது புதி­தா­கத் திறக்­கப்­ப­டு­கின்ற விந்தை, வட மாகா­ணத்­தில் எவ்­வாறு உட்­பு­குந்­ததோ தெரி­ய­வில்லை. கட­வுளே நீயும் இதற்கு உடந்தை போலவே தெரி­கி­றது.

ஒரு நாளில் ஒரே­யொரு மாடு மட்­டும் கொல்­க­ளத்­தில் வெட்­டப்­ப­டும் வழக்­கம் இருந்­த­போது, திடீ­ரென்று இரு­பது மாடு­கள் ஒரே நாளில் வெட்­டிச் சரிக்­கப்­பட்ட அவல நிலை கண்டு சிவ­பூ­மி­யா­கிய யாழ். மண், சோபை இழந்­தி­ருக்க வேண்­டும்.

ஆனால் அது நடை­பெ­ற­வே­யில்லை. கதைக்க வேண்­டி­ய­வர்­கள் அற்ப சொற்ப பத­வி­க­ளுக்­காக வாய்­தி­றக்­க­வே­யில்லை. எத்­தனை நிறு­வ­னங்­கள், எங்­கள் சம­யத்­துக்­காக உள்­ளன. எனி­னும் என்ன பயன்? கடி­தத் தலைப்­பு­க­ளில் பெய­ரை­யும் பட்­டங்­க­ளை­யும் போட்டு வறுத்­தெ­டுப்­ப­தோடு மட்­டும் நின்று கொண்டு ‘‘உது எப்­பவோ முடிந்த காரி­ய­’’­மெ­னப் பின்­வாங்கி, பொங்­கல் பூசை விழாக்­க­ளோடு கெட்­டித்­த­னம் பேசு­வ­தா­கவே எமது சம­யம் பய­ணிக்­கி­றது. ஒரு அநி­யா­யம், அக்­கி­ர­மம், அடா­வ­டித்­த­னம் சமூ­கத்­தில் இடம்­பெ­றும்­போது தட்­டிக் கேட்­கக்­கூ­டிய தலை­மைத்­து­வம் இல்­லா­மல் போய்­விட்­டதே என்ற வகை­யில் எமது மண் என்ன பாவம் செய்­ததோ?

இன்­னும் சற்­றுக்­கா­லம் சென்­ற­பின் ஆடு, மாடு, கோழி என இம்­மூன்­றும், யாழ்ப்­பா­ணத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்­குப் படத்­தி­லே­தான் கீறிக் கண்­பிக்க வேண்­டிய தேவையை நாம் உரு­வாக்­கி­விட்­டோம். மேடை­க­ளும், கதி­ரை­க­ளுந்­தான் யாழ்ப்­பா­ணம் என்­றா­கி­விட்­டதோ?
கே.எஸ்.சிவ­ஞா­ன­ராஜா

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of