தேவையற்றதாக மாறி விட்டதா வடமாகாண சபை?

இந்­தி­யத் தூது­வர் புத்­தி­மதி கூறும் அள­வுக்கு வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஒற்­றுமை சந்தி சிரிக்க வைத்­துள்­ளது. அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த இந்­தி­யத் தூதர் தரன்­ஜித்­சிங்º, வடக்கு முத­ல­மைச்­ச­ரை­யும் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார்.

இதன் போதே வடக்கு மாகாண சபை­யில் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­மா­றும், அப்­போது தான் அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக் கொள்ள முடி­யு­மெ­ன­வும், வடக் கின் உட்­கட்­ட­மைப்பு மற்­றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யில் முன்­னேற்­றத்­தைக் காண­மு­டி­யு­மெ­ன­வும், முத­ல­மைச்­ச­ருக்கு இந்­தி­யத்­தூ­து­வர் அறி­வுரை கூறி­யுள்­ளார்.

ஆனால் தன்­னிச்­சை­யா­கச் செயற்­பட்­டு­வ­ரும் முத­ல­ மைச்­ச­ரின் காதில் இந்­தி­யத் தூது­வ­ரின் புத்­தி­மதி ஏறி­யி­ருக்­குமா? என்­பது சந்­தே­கமே.

ஒரு மாகா­ணத்­தின் முத­ல­மைச்­ச­ரி­டம் பல தகை­மை­கள் காணப்­பட வேண்­டும். இதில் முக்கியமா­னது பார­பட்­ச­மற்ற வகை­யில் செயற்­ப­டு­வ­தா­கும். இது எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்­கும் பொருந்­தும். ஆனால் வடக்கு முத­ல­மைச்­சர் தாம் சார்ந்து நிற்­கின்ற ஆளும் கட்­சிக்­குள்­ளேயே பார­பட்­ச­மாக நடந்து கொள்­கின்­றார் என்ற குற்­றச் சாட்டு எழுந்­துள்­ளது.

சில அமைச்­சர்­களை வேண்­டு­மென்றே புறக்­க­ணித்தார்
முதலமைச்சர்

வடக்கு மாகா­ண­ச­பை­யின் இரண்டு புதிய அமைச்­சர்­க­ளின் பத­வி­யேற்பு வைப­வம், இந்­தி­யத் தூது­வ­ரு­ட­னான சந்­திப்பு ஆகி­ய­வற்­றின்­போது முத­ல­மைச்­ச­ருக்கு விருப்­ப­மில் லாத அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­ லிங்­கம் மற்றும் பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோர் வேண்­டு­மென்றே புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இது தொடர்­பாக அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் கருத்­துத் தெரி­விக்­கை­யில்; முத­லமைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் ஆளும் தரப்­பில் தமக்கு வேண்­டிய 14 பேரு­டன் மட்­டுமே உற­வு­க­ளைப் பேணி­வ­ரு­கின்­றார். ஆலோ­ச­னை­யில் ஈடுபடுகின் றார். ஏனை­ய­வர்­கள் அவ­ரால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­ற­னர், என்று கூறி­யி­ருக்­கி­றார்.

முத­ல­மைச்­ச­ரின் இந்த நிலைப்­பாட்டை எவ­ருமே ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள். அவ­ருக்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­ப­வர்­கள் கூடத் தமக்­கும் மற்­ற­வர்­கள் போன்­ற­தொரு நிலை எப்­போ­தா­வது ஏற்­ப­டு­மென்­ப­தைப் புரிந்து கொள்ள வேண்­டும். அதே­வேளை, வடக்கு மாகா­ண­ச­பை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் அங்­கம்­வ­கிக்­கின்ற மொத்­த­முள்ள 30 ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­கள் 15 க்குப் 15 என்ற வகை­யில் பிள­வு­பட்டு நிற்­கின்­ற­னர்.

முத­ல­மைச்­ச ­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்­சி­யி­னால் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது அதே கட்­சி­யைச் சேர்ந்த மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான அனந்தி மற்­றும் கஜ­தீ­பன் ஆகி­யோர் அதற்கு எதி­ரா­க­வும் நடந்து கொண்­ட­னர். இன்று அனந்­திக்கு அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­கா­லத்­தில் கஜ­தீ­ப­னும் முதல்­வ­ரால் கவ­னத்­தில் கொள்­ளப்­ப­ட­லாம்.

மௌனிக்­கப்­பட்ட  ஆயு­தப் போராட்­டம்

தமிழ் இளை­ஞர்­க­ளின் ஆயு­தப் போராட்­டமே ஈழத்­த­மி­ழர்­களை உல­குக்கு அடை­யா­ளம் காட்­டி­யது. தமி­ழர்­க­ளுக்­கெ­னத் தனி­யான தாய­கம் கிடைத்­தால் மட்­டுமே அவர்­கள் கௌர­வ­மா­க­வும், நிம்­ம­தி­யா­க­வும் வாழ முடி­யு­மென அவர்­கள் எண்­ணி­னார்­கள். அந்­தக் குறிக்­கோ­ளு­ட­னேயே போரா­டி­னார்­கள். ஆனால் எவ­ருமே எதிர்­பார்க்­கா­த­வாறு அந்­தப் போராட்­டம் மௌனிக்­கப்­பட்டு விட்­டது. இத­னால் தமி­ழர்­கள் ஏது­மற்ற ஏதி­லி­க­ளா­கக் கணிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

தனி­நாடு கேட்ட தமி­ழர்­கள் இன்று தமது தாய­க பூமி­யா­கிய வடக்­குக் கிழக்­கைப் பிள­வு­பட்ட நிலை­யி­லேயே பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். கிழக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­சர் பத­வி­கூட அவர்­க­ளுக்­குக் கிடைக்­க­வில்லை. இந்த நிலை­யில், பெரும் இழு­பறி நிலை­யின் பின்னர் வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் 2013 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் இடம்­பெற்­றது.

தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு அனை­வ­ரும் எதிர்­பார்த்­த­தைப் போன்று அமோக வெற்றி பெற்­றது. விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் பத­வி­யில் நோகா­மல் அமர்ந்து கொண்­டார். கஷ்­டப்­ப­டா­மல் கிடைக்­கின்ற சுகத்­தின் அருமை பலருக்குத் தெரி­வ­தில்லை.

அதை எவ்­வாறு அனு­ப­விப்­பது என்­ப­தைப் புரி­யா­மல் குழம்பி நிற்­பார்­கள். ஏனை­ய­வர்­க­ளை­யும் குழப்­பு­வார்­கள். இதைப் போன்­ற­தொரு நிலை­தான் தற்­போது வடக்கு மாகா­ண­
ச­பை­யில் காணப்­ப­டு­கின்­றது.

தமிழ்­நாட்டு அர­சி­ய­லி­லும் பல்­வேறு சிக்­கல்­கள்

இந்­தி­யா­வின் தமிழ் நாட்­டைத் தமி­ழர்­க­ளின் தாய­க­மெ­னக் கூறு­வார்­கள். இங்கு வேறெங் கும் இல்லாத அளவுக்கு அதி­க­மான, சுமார் ஏழு கோடி தமிழ் மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இந்­தி­யா­வின் அபி­வி­ருந்­தி­ய­டைந்த மாநி­லங்­க­ளில் தமிழ்­நாடு முக்கியமானது. அங்­கும் அடிக்­கடி அர­சி­யல் சிக்­கல்­கள் எழு­வது வழ­மை­யா­கும். ஆனால் ஆளும் கட்­சிக்­குள் மிகப் பெரிய சிக்­கல் இப்­போது தான் எழுந்­துள்­ளது.

இன்­றைய நில­வ­ரப்­படி தமிழ் நாட்­டின் ஆளும் அ.தி.மு.க. கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மூன்று அணி­க­ளா­கப் பிரிந்து காணப்­ப­டு­கின்­ற­னர். பன்­னீர்செல்வம் அணி, பழ­னிச்­சாமி அணி மற்­றும் தின­க­ரன் அணி ஆகிய மூன்று அணி­க­ளுமே அவை­யா­கும். இத­னால் அந்த மாநி­லத்­தின் அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் தேக்க நிலை­யொன்று தோன்­றி­யி­ருப்­ப­தாக மக்­கள் குறை கூறு­கின்­ற­னர். மக்­கள் தின­மும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­வ­தை­யும் அங்கு காண­மு­டி­கி­றது.

தமிழ்­நாட்­டு­டன் ஒப்­பி­டும் போது வட­மா­கா­ணத்­தை­யொரு சுண்­டங்­காய் என்றே கூற­வேண்­டும் நிலப்­ப­ரப்­பும் குறைவு; மக்­கள் தொகை­யும் குறைவு. இதில் வறட்­சி­யின் தாண்­ட­வம் வேறு. மக்­கள் தமக்­குத் தேவை­யான குடி­தண்­ணீ­ரைப் பெறு­வ­தில்கூடத் துய­ரங்­களை எதிர் கொண்டு வரு­கின்­ற­னர். கடும் வறட்சி கார­ண­மாக தோட்­டப் பயிர்­கள் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­கின்­றன.

வேலை கிடைக்­காத நிலை­யில் இளை­ஞர்­கள் அடா­வ­டித்­த­னங்­க­ளில் தமது பொழு­தைக் கழித்து வரு­கின்­ற­னர். தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் மற்றும் வேலையற்ற பட்­ட­தா­ரி­கள் போராட்­ட­ஙக்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இடம்­பெ­யர்ந்த மக்­க­ளின் அவ­லங்கள் இன்­ன­மும் தொடர்­கின்­றன. மக்­க­ளின் காணி­க­ளில் பௌத்த விகா­ரை­களை அமைக்­கும் பணி­கள் சூட்­சு­ம­மான முறை­யில் இடம்­பெற்று வரு­கின்­றன.

வெளி­யூர் மீன­வர்­க­ளால் உள்­ளூர் மீன­வர்­கள் தொடர்ந்து பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால் இவை­யெல்­லாம் வடக்கு மாகாண சபை­யி­னதோ அல்­லது முதல்­வ­ரி­னதோ கவ­னத்தை ஈர்த்­த­தா­கத் தெரி­ய­வில்லை. அமைச் சர்­களை நிய­மிப்­ப­தும், அமைச் சர்­கள் மீது விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தும், அர­சி­யல் காய்­ந­கர்த்­தல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தும் தான் ஒரு மாகா­ணத்­தின் முத­ல­மைச்­ச­ரின் கட­மை­கள் என்­றால் அவ்­வா­றா­ன­தொரு பத­விக்கு இங்கு தேவையே இல்லை. மாகா­ண­ச­பை நிர் வாகத்தாலும் பயன் கிடைக்கப் போவதில்லை..

You might also like