மொசூல் நகரைக் கைப்பற்றியது ஈராக் இராணுவம்!

ஐ.எஸ்.ஐ. அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் நகரை ஈராக் இராணுவம் முற்றாகக் கைப்பற்றியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

மொசூல் நகரில், 15 இலட்சத்துக்கு அதிகமானோர் வாழ்கின்றனர். 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் மொசூல் நகரை கைப்பற்றியிருந்தனர்.

சிரியாவின் சில பகுதிகளையும் மொசூல் நகரையும் இணைத்து தனி நாடாக அறிவித்திருந்தனர்.

PHOTO: East Mosul, which was seized by government troops at the start of the year, is still subject to IS attacks.

மொசூல் நகரை மீட்கவும், ஐ.எஸ்.ஐ. அமைப்பினரை அழிக்கவும், அமெரிக்க தலைமையிலான கூட்டு படைகளுடன் இணைந்து ஈராக் நாட்டு படைகளும் போரிட்டு வந்தன.

தற்போது முழுமையாக மொசூல் நகரம் மீட்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு பிரதமர், ஹைதர் அல் அபாதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நகரின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

You might also like