கடற்படை விமானம் மிசிசிப்பியில் விபத்து – 16 பேர் உயிரிழப்பு!

எரிபொருள் மற்றும் பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் அமெரிக்க கடற்படை சரக்கு விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் விபத்துக்குள்ளானது.

நேற்று மாலை இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் இருந்து 16 பேரது உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அந்தப் பிராந்திய அவசர முகாமைத்துவ மையத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

Marine Corps spokeswoman Captain Sarah Burns said that a KC-130 ‘experienced a mishap’. Photograph: AP

அந்தப் பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படடது.

விபத்துக்குள்ளான சீ-130 ரக விமானமானது இராணுவங்களில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் விமானங்களில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like