உணவே மருந்து

நமது சமூ­கம் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்­ளது. சீரான உண­வுப் பழக்­க­மும், உடற்­ப­யிற்­சி­யும் நல்­லொ­ழுக்­க­மும் உடல் ஆரோக்­கி­யத்­தைத் தக்­க­வைத்து நீண்ட ஆயுளை எமக்­குத் தரு­கின்­றன.

இன்று நாம் பலவித தொற்­றும் தொற்­றாத நோய்­க­ளுக்கு ஆளாகி அல்­லற்­ப­டு­கி­றோம் முப்­பது வய­தா­னாலே மருந்­து­கள் நம்­மைப் பாது­காக்­கும் நிலைக்­குத் தள்­ளப்­ப­டு­கி­றோம். ஆனா­லும் கவர்ச்­சி­க­ர­மான உண­வு­களை உண்டு ஆடம்­ப­ர­மாக வாழ்­வ­தையே நாம் பெரி­தும் விரும்­பு­கிறோம்.

நமக்கு முன் இருக்­கின்ற உணவு சரி­யா­னதா? ஆரோக்­கி­ய­மா­னதா? சம­வி­கித உணவா? நோய்­களை உரு­வாக்க கார­ண­மா­குமா? இவ்­வு­ண­வு­க­ளால் தேவை­யற்ற அழுக்­கு­கள் நம் உட­லில் சேருமா? சமூ­கத்­துக்கு கேடா­குமா? என யாருமே சிந்­திப்­ப­தில்லை.

 

நம் முன்­னோ­ரின் உண­வுப் பழக்­க­மா­னது ஆரோக்­கி­ய­மாக நீண்­ட­கா­லம் அவர்­களை வாழ வழி­ச­மைத்­தது. சாமை குரக்­கன், வரகு போன்ற தானி­யங்­களை இன்­றைய சிறு­வர்­க­ளுக்கு தெரி­யாது. அதே சிறு­வர்­கள் அவற்றை தாம் வளர்க்­கும் புறாக்­க­ளுக்கு உண­வாக வாங்­கு­கின்­ற­னர். இது காலத்­தின் கொடு­மை­யல்­லவா?

முன்­னோ­ரின் உண­வு­கள்

நம் முன்­னோ­ரின் உண­வுப்­ப­ழக்­கங்­கள் நம்­முன் இருக்க நாக­ரிக உண­வு­களைத் தேடி அலை­கி­றோம் வட இந்­தி­யா­வின் கடற்­கரை யோரத்­தில் குடி­யி­ருந்த மக்­கள் மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்­த­னர் எனக் கூறப்­ப­டு­கி­றது. அவர்­க­ளது உண­வாக வேட்­டை­யா­டிய மிரு­கங்­க­ளின் இறைச்­சி­யும், தாவர உண­வு­க­ளும் அமைந்­தி­ருந்­தது.

 

உண­வெ­னப்­ப­டு­வது நிலத்தோடு நீரே… என்­கி­றது புற­நா­னூறு எனவே நில­மும் நீரும் சுத்­த­மாக இருக்க வேண்­டி­ய­தும். அவற்­றி­னால் உரு­வா­கும் உண­வு­க­ளுமே ஆரோக்­கி­ய­மா­னது. எம் நடை­முறை வாழ்­வில் பொதி­க­ளில் அடைக்­கப்­பட்ட உண­வு­க­ளுக்கு முத­லி­டம் கிடைக்­கி ­றது.

கவர்ச்­சி­க­ர­மான பைக்­கற்­று­க­ளில் மனதை கொள்ளை கொள்­ளும் விளம்­ப­ ரங்­க­ளில் விற்­ப­னை­ யா­கும் உண­வுப் பொருள்­களை அதிக விலை கொடுத்து வாங்கி உண்­கி­றோம். அதுவே மதிப்­பார்ந்த கௌர­வ­மாக கரு­து­கி­றோம்.

பொதி­க­ளில் அடைக்­கப்­பட்ட உண­வு­களை நாம் நோக்­கின் பல­வித தொழில்­நுட்­பங்­க­ளுக்­குள்­ளாகி மிகக் கூடு­த­லான வெப்­பத்தை தாங்கி இர­சா­ய­னக் கல­வை­கள் சேர்க்­கப்­பட்டு பதப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உண­வின் போச­ணைச் சத்­துக்­கள் நீரி­னால் காற்­றால் வெப்­பத்­தால் மிக மிக விரை­வில் அழிந்து விடும் தன்­மை­யு­டை­யன.

இவ்­வாறு பல படி­மு­றை­க­ளைத் தாண்டி பொதி­யில் அடைக்­கப்­ப­டும் உண­வு­க­ளில் நாம் எதிர்­பார்க்­கின்ற உட­லுக்­குத் தேவை­யான சத்­துக்­கள் ஏதா­வது கிடைக்­குமா? என்­பதை சிந்­திக்க வேண்­டி­யது எமது கடமை. அது மட்­டு­மல்ல உணவை எடுத்­துக் கொண்­ட­பின் வெற்­றுப் பொதி­களை மண்­ணிலே வீசி விடு­கி­றோம். அவை உக்­கல்­நிலை அடைய பல வரு­டங்­கள் ஆகின்­றன. அவற்றை எரித்து அழிக்க முற்­ப­டும் போது வெளி­வ­ரும் வாயு எம்மை மட்­டு­மல்ல எம்­மைச் சுற்­றி­யுள்ள ­வர்­க­ளுக்­கும் வளிக்­கும் நஞ்­சாக மாறு­கின்­றது.

குதி­ரைக்­கான உணவு

ஓட்ஸ் என்­னும் தானிய உண­வுக்­கான விளம்­ப­ரம் நம்­ம­வரை அவற்றை நுகர வைக்­கின்­றது. ஓட்ஸ்ட் மேலை நாடு­க­ளில் குதி­ரைக்கு உண­வா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஓட்ஸை விட தர­மான சத்­துக்­கள் மிகச் செறிந்­துள்ள தானி­ய­ங்கள் நம்­மி­டம் உண்டு. அவற்றை நாம் ஓரங்­கட்­டி­விட்டு விளம்­ப­ரத்­துக்க அடி­மை­யாகி பணத்தை விர­யம் செய்து நவீ­னத்­துக்­குள் பிர­வே­கிக்­கி­ றோம். இத­னால் எமது ஆரோக்­கி­யம் காவு கொள்­ளப்­ப­டு­கி­றது.

பழங்­க­ளில் கூட மேலை­நாட்­டுப் பழங்­க­ளையே நாம் விரும்பி உண்­கி­றோம். எமது நாட்­டில் கிடைக்­கின்ற வாழைப்­ப­ழம், மாம்­ப­ழம், பப்­பாசி, தோடை, எலு­மிச்சை, தக்­காளி என்­பன போதி­ய­ளவு நீர்ச்­சத்­தும் உயிர்ச்­சத்­துக்­க­ளும் கொண்­ட­வை­யாக உள்­ளன. போத்­தல்­க­ளில் அடைக்­கப்­பட்ட மென்­பா­னங்­களை அதிக விலை கொடுத்து வழங்­கு­வதை விட குறைந்த செல­வில் நிறைந்த சத்­துக்­களை கொண்ட எமது நாட்­டுப் பழங்­க­ளைக் கொண்டு தயாரிக்கப்படும் பழச்­சாறு உடல் நலத்தை மேம்­ப­டுத்­தும்.

மூன்று வேளை­யும் அதிக மருந்­து­கள்

சிலர் ஓயாது நோய்­க­ளையே சொல்­லிக் கொண்­டி­ருப்­பார்கள். மூன்று வேளை­யும் கொத்­துக் கொத்­தாக மாத்­தி­ரை­களை உட்­கொள்­வர். வைத்­தி­ய­சா­லை­க­ளில் கிளி­னிக் வாங்­கில் வரி­சை­யில் முண்­டி­ய­டிப்­பர். இவை­யெல்­லாம் ஏன்? முத­லில் உணவை மருந்­தா­கக் கொள்ள வேண்­டும். மருந்து பாவிக்க வேண்­டிய முக்­கிய தரு­ணங்­க­ளில் விபத்து , பிர­ச­வம், வயோ­தி­ப­நிலை நோய்­கள் கட்­டா­ய­மாக மருந்­து­களை உட்­கொள்­ள­லாம்.

நோய்க்­கி­டங்­கொ­டேல் என்­கிற ஒளவை மொழிக்­கேற்ப நோயை வெறுத்து ஒறுத்து வாழப் பழ­கிக் கொள்ள வேண்­டும். குறிப்­பிட்ட வய­தின் பின்­னர் நோ ய் தான் வாழ்க்கை என விரக்­தி­யில் வாழும் ஏரா­ள­மா­னோரை இன்று எம் சமூ­கம் கொண்­டுள்­ளது. கார­ணம் தப்­பா­ன­வற்றை தவ­றா­ன­வற்றை வாழ்க்­கைக்கு ஒவ்­வாத பல­வற்றை ஆதா­ர­மாக்கி அவையே கௌர­வம் என­வா­ழும் நிலைக்கு நாம் ஆளாகி விட்­டோம் என்­கிற கசப்­பான உண்­மையை யாவ­ரும் ஏற்­றுத்­தான் ஆக வேண்­டும்.

பகுத்­துண்டு பல்­லு­யிர் ஓம்பி வாழ்ந்த மனி­தன் இன்று பணத்­துக்­காக வாழத் தொடங்­கி­ய­தால் எதி­லும் பணத்­தையே முதன்­மைப்­ப­டுத்­து­கி­றான். விவ­சாயி குறு­கிய காலத்­தில் அதிக விளைச்­சலை பெறு­வ­தற்­காக வீரி­யம் கொண்ட கிருமி நாசி­னி­கள் உரங்­கள் என்­ப­வற்றை விளைச்­ச­ லுக்கு பயன்­ப­டுத்­து­கி­றான்.

வியா­ பா­ரி­கள் பழங்­களை பழுக்க வைக்க மருந்­து­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். முன்­னர் வேப்­பி­லை­யி­லும் வைக்­கோ­லி­லும் பழுத்த பழங்­கள் மருந்து விசி­றல் மூலம் பழுக்­கின்­றன. இவை யெல்­லாம் புற்­று­நோயை தோற்­று­விக்க கார­ண­மா­கின்­றன. டி.டி.ரி என்­கிற எறும்பு கொல்­லியே பிரி­கை­ய­டை­ வ­தில்லை. கிருமி நாசி­னி­கள் மனித உள்­ளு­றுப்­பு­களை எப்­படி சிதைக்­கும் என்­பதை சிந்­திக்க நாம் மறக்­க­லாமா?

சூப்­கள் விற்­பனை செய்­கிற உண­வு­வி­டு­தி­கள் ஆங்­காங்கு முளைத்­துள்­ளன. வகை­வ­கை­யான சூப்­கள் பல்­வேறு விலை­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. நம்­பண்­பாட்­டில் உள்ள ஒடி­யற்­கூழ் மர­வள்­ளிக் கூழ், கட­லு­ண­வுக்­கூழ் என்­ப­னவே சில நிற­மூட்­டி­கள் சுவை­யூட்­டி­க­ளின் கலப்­ப­டத்­தில் சூப் என பெயர் பெறு­கின்­றன.

இவ்­வாறு சொல்­லிக் கொண்­டே­போ­க­லாம். நமது பிர­தே­சம் ஆரோக்­கி­ய­மாக வாழ்­வ­தற்கு ஏற்ற அத்­தனை வளங்­க­ளும் கொண்­ட­தாக உள்­ளதை முத­லில் நாம் உணர்ந்து கொள்ள வேண்­டும். சுத்­த­மான சுவை­யான நீர் பச்சை இலை­வகை காய்­க­றி­கள் பழங்­கள் என்­பன உட­ன­டி­யாக தாரா­ள­மா­கக் கிடைக்­கின்­றன.

வேலி­க­ளில் படர்­கின்ற பச்­சைக் கொடி­கள் தரும் ஆரோக்­கி­யத்தை பைக்­கற் உண­வு­கள் தரு­வ­தில்லை. வேலி­கள் மதில்­க­ளாக மாறி­விட்­டன. தாவ­ரங்­கள் கொடி­கள் வளர்ச்­சிக்கு வீட்­டின் ஓரங்­களை மரங்­களை நாட்­டிச் செப்­ப­னிட்டு தாவ­ரங்­களை வளர்த்து உண­வுக்­குப் பயன்­ப­டுத்­து­வது சிறந்­தது.

ஆக மனிதா ஆரோக்­கி­யம் விளம்­ப­ரங்­க­ ளால் காவு கொள்­ளப்­ப­டு­வதா? நீரி­ழிவு புற்­று­நோய் மார­டைப்பு, உயர் குரு­தி­ய­முக்­கம் என்­னும் நோய்­கள் சமு­தா­யத்­தில் இருந்து விரட்டி பழக்க இன்றே இந்த நிமி­ட­மும் உன் ஆரோக்­கி­யத்­தைத் தக்க வைத்­துக்­கொள்.

சட்­டைப்­பை­க­ளில் அழ­காக சுற்­றி­ வைத்­தி­ருக்­கும் மாத்­தி­ரைப்­பொட்­டலங்களை உன்னை விட்டு மட்­டு­மல்ல சமூ­கத்தை விட்­டும் தூர வீசி யெறி. சத்­து­ண­வு­க­ளைத் தேடி உண்டு ஆரோக்­கி­யத்­தோடு வாழ முனைந்­திடு. நோய்­க­ளா­லும் ஆரோக்­கி­ய­மின்­மை­யா­லும் பொலி­வி­ழந்து நிற்­கும் எம் சமூ­கம் போசாக்­கி­னால் உருண்டு திரண்டு வாழ இன்றே உன்னை நீ செப்­ப­னிட்டு ஆரோக்­கி­ய­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்பு. அதுவே மனி­தம் வாழும் கோயில் உணர்­வாயா? திருந்­து­வாயா?

You might also like