ஆலய உடைப்­பும், ஆவி­னக் கடத்­த­லும் ஆத்­தி­ர­மூட்­டு­ப­வையே!!

Get real time updates directly on you device, subscribe now.

எந்த மத­மா­யி­னும் ஒரு ஆல­யம் சின்னா பின்­ன­மாக்­கப் பட்டு, அதற்­குள்­ளே­யி­ருக்­கும் தெய்வ விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­ப­டு­வ­தும், உடைக்­கப்­ப­டு­வ­தும் மிக­மிக வேத­னை­ய­ளிக்­கும் செயற்­பாடே. இதனை கைகட்டி வாய்­பொத்தி ஒரு சமூ­கம் பார்த்­துக் கொண்­டி­ருப்­பதை இரண்டு விதத்­தில் நோக்­க­லாம்.

ஒன்று, இது சம்­பந்­த­மா­ன­வர்­களை இறை­வனே பார்த்­துக் கொள்­ளு­வான் என்று ஒதுங்­கி­யி­ருந்­தல். இரண்­டா­வது, பல­நாள் திரு­டன் ஒரு நாள் எப்­ப­டி­யும் அகப்­பட்டே தீரு­வான் என்று கொதிப்­ப­டை­யாது அர­சி­டம் முறை­யி­டு­தல்.

இவை­யி­ரண்­டும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கூடிய விரை­வில் இனங்­காட்ட வழி புரி­யும். பழி எவ­ரை­யும் சும்மா விடாது. ஓகோ என்று வாழ்ப வர்களை பழி­யும் பாவ­மும் துரத்­தித் துரத்தி ஓட­வைக்­கும்.

சிவன் சொத்து குல­நா­சம். சிவம் நின்று இருந்து பையப்­பைய அணு அணு­வாய்க் கொடூ­ர­மாக்­கிக் கடூ­ர­மாக்­கியே தீரும். இதில் எவருமே சந்­தே­கப்­பட வேண்­டாம். குறிப்­பாக, இந்து ஆல­யங்­கள் துவம்­சம் செய்­யப்­ப­டு­வ­தும், மாடு­கள் கடத்­தப்­பட்டு இறைச்­சி­யாக்­கப்­ப­டு­வ­தும் இந்­துக்­களை மிக­வும் புண்­ப­ட­வைத்­துள்­ளன. அரசு அதற்­கான கடும் நட­வ­டிக்கை எடுத்தே தீர வேண்­டும். இல்­லா­விட்­டால் அர­சி­யல் தோற்றே போய்­வி­டும்.

அநு­ரா­த­பு­ரம், பொல­ந­றுவை, மன்­னார், வவு­னியா முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி என சகல பகுதிகளைச் சேர்ந்த மக்­க­ளும் ஒன்­றாக வாழும் இடங்­க­ளில் பொது­வா­கவே இந்து ஆல­யங்­கள் பாதிக்­கப்­ப­டு­வது நாட்­டில் மத சுதந்­தி­ரம் இல்லை என்­ப­தையே வௌிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

அல்­லா­ம­லும், இலங்­கையை அது­வும் வட­மா­கா­ணத்தை தளம்­பல் நிலை­யில் வைத்­தி­ருப்­ப­தற்கு ஒரு சிலர் எமது இந்து மதத்தை ஒரு துரும்­பாக எடுத்­துள்­ள­னர். இவர்­க­ளைக் கண்டு பிடிப்­ப­தென்­பது கடி­ன­மான காரி­ய­மல்ல. அவ­ர­வர் தத்­த­மது பணி­யைச் செவ்­வனே செய்­து­விட்­டால் சட்­டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­லாம்.சம்­ப­ளத்­துக்­குக் கடமை என்ற நிலை இருக்­கு­மா­னால் எமது மதத்தை இறை­வ­னா­லும் காப்­பாற்ற முடி­யா­மல் போய்­வி­டும்.

–கருடன்

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of