சிறுநீர் கழிக்கச் சென்ற இளைஞன் – மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

கொழும்பு மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. நித்திரை மயக்கத்தில் நடந்து சென்று சிறுநீர் கழிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், 5 ஆவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், பஹமல்கொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த உபுல் குமார என்ற 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of