தேவாலயங்கள் மீது தற்கொலை தாக்குதல்!!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் காணப்படும் மூன்று முக்கிய தேவாலயங்கள் மீது ஆயுதததாரிகளால் இன்று அதிகாலை தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக மக்கள் கூடியிருந்த தேவாலயங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of