மழை வேண்டி தவளைக்கு திருமணம் : பொதுமக்கள் நூதன வழிபாடு!!

Get real time updates directly on you device, subscribe now.

அணைக்கட்டு அருகே மழை வேண்டி தவளைக்குத் திருமணம் செய்து பொதுமக்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு புத்தேரி என்ற ஏரியும், அரசு பள்ளி எதிரே உள்ள வண்ணாங்குளம் ஒன்றும் உள்ளது. இந்த 2 நீர்நிலைகள் தான் இப்பகுதி மக்களின் நீராதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் தங்கள் பகுதியின் நீராதாரத்துக்காக இக்கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்ணாங்குளக்கரையில் தவளைக்கும், தவளைக்கும் திருமணம் செய்யும் விழாவை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டும் பென்னாத்தூர் கேசவபுரம் மக்கள் மழை வேண்டி நேற்று மாலை 6.30 மணியளவில் வண்ணாங்குளக்கரையில் தவளைக்கும், தவளைக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். இதற்காக குளக்கரையில் சிறிய பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி இரண்டு தவளைகளையும் விட்டனர்.

பின்னர் அங்கு சிறப்பு பூசைகள் செய்தனர். தொடர்ந்து அதில் தவளைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் 2 தவளைகளையும் அந்த குளத்தில் ஜோடியாக விட்டனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று கூடி மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர்.

பின்னர், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட உணவு தானியங்கள் மூலம் கேழ்வரகு களி, கருவாட்டு குழம்பு, பருப்பு சாம்பாருடன் விருந்து பரிமாறப்பட்டது. தவளைகளுக்கு நடத்திய திருமண விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘தவளைக்கும், தவளைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்பது எங்களது நம்பிக்கை, இந்த ஏரியும், குளமும் தான் எங்களுக்கு நீராதாரமாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் தவறாமல் தவளைக்கும், தவளைக்கும் திருமணம் நடத்தி வருகிறோம்’ என்றனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of