457 தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு -யாழ்ப்பாணத்தில் நிய­ம­னம்!!

Get real time updates directly on you device, subscribe now.

வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த 457 தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு எதிர்­வ­ரும் 22ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து நிய­ம­னங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன என்று கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வே.இரா­தா­கிஸ்­ணன் தெரி­வித்­தார்.

எக்­கா­ர­ணம் கொண்­டும் இனி­மேல் பாட­சா­லை­க­ளில் தொண்­ட­ரா­சி­ரி­யர்­க­ளாக எவ­ரும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வடக்கு மாகா­ணத் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னங்­கள் வழங்­கு­வது தொடர்­பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்­த­போதே இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஸ்­ணன் இவ்­வாறு தெரி­வித்­தார் என்று அவ­ரது ஊட­கப் பிரிவு அனுப்­பி­வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
வடக்­கில் நீண்ட நாள்­க­ளா­கப் பிரச்­சி­னை­யாக இருந்த தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­ம­னத்­துக்­குத் தீர்­வாக இரண்­டாம் கட்­ட­மாக 457 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. எதிர்­வ­ரும் 22ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் செல்­லும் தலைமை அமைச்­சர் ரனில்­விக்­க­ர­ம­சிங்க தலை­மை­யில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் இந்த நிய­ம­னங்­கள் வழங்கி வைக்­கப்­ப­டும்.

தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் நிய­ம­னத்­தில் முதற் கட்­ட­மாக 182 பேருக்கு அன்­மை­யில் நிய­ம­னங்­கள் வழங்கி வைக்­க­பட்­டன. தற்­போது இரண்­டாம் கட்­ட­மாக 457 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இவர்­க­ளில் 6 பேர் தேசி­யப் பாட­சா­லை­க­ளுக்­கும் 451 பேர் மாகா­ணப் பாட­சா­லை­க­ளுக்­கும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­னர்.

நிய­ம­னம் பெறு­ப­வர்­க­ளில் தீவக பகு­தி­க­ளுக்கு 40 பேரும், யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யத்­துக்கு 29 பேரும் கிளி­நொச்சி கல்வி வல­யத்­துக்கு 142 பேரும் மடு கல்வி வல­யத்­துக்கு 4 பேரும் மன்­னார் கல்வி வல­யத்­துக்கு 14 பேரும் முல்­லைத்­தீவு கல்வி வல­யத்­திற்கு 59 பேரும் தென்­ம­ராட்சி கல்வி வல­யத்­துக்கு 10 பேரும் துணுக்­காய் கல்வி வல­யத்­துக்கு 21 பேரும் வட­ம­ராட்சி கல்வி வல­யத்­துக்கு 34 பேரும் வலி­கா­மம் கல்வி வல­யத்­துக்கு 39 பேரும் வவு­னியா வடக்கு கல்வி வல­யத்­துக்கு 16 பேரும் வவு­னியா தெற்கு கல்வி வல­யத்­துக்கு 49 பேரும் அனுப்­பப்­ப­ட­வுள்­ள­னர்.

இனி­மேல் எக்­கா­ர­ணம் கொண்­டும் தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் சேவைக்கு இணைத்­துக் கொள்­ள­மாட்­டார்­கள் -என்­றுள்­ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of