இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

இன்றைய இராசிபலன்

மேஷம்: அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, இந்திர போகம் ஏற்படும் இனிய நாள். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு தரும் அருமையான நாள் இன்று.

ரிஷபம்: தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.          சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் உணர்வுபூர்வமான சந்தோஷம் நிலவும்.

மிதுனம்: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். எவருக்கும் தீமை செய்யும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.

கன்னி: ஆரோக்கியக் குறைவுகளைத் தவிர்க்கக் குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை. அனைவருடனும் சுமுகமாக, அமைதியாகப் பழகினால் எதிர்ப்புகள் குறையும்.

மகரம்: வாக்கு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: புதிய பயிற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தெளிவும் பிறக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்னையா பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

சிம்மம்: இன்று, அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும், புதுப் பெண்கள் சினேகமும் உண்டாகும்.

துலாம்: அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார வரவுகள் எதிர் பார்த்த அளவுக்கு இருக்காது. அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். வயிற்று உபாதைகள் தொல்லை தரலாம். படுத்தவுடன் தூக்கம் வராது.

தனுசு: தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.

விருச்சிகம்: மனத் தெம்பும், மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.

கும்பம்: மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.

மீனம்: பெண்காளால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி உண்டு. ஆரோக்கியமும் மேம்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.

You might also like