வேற்றுக்கிரக வாசியா? – வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

இந்தியா – குடகு மாவட்டத்தில், உள்ள அன்டுர் கிராம மக்கள் வேற்றுக் கிரகவாசிகள் அச்சம் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள விவசாயப் பண்ணைக்கு அருகே திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்த கிராமத்தினர், இதுவரை இதுபோன்ற கால்தடத்தைப் பார்த்ததில்லை என்றும், எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை ஆதலால் அது வேற்றுக் கிரகவாசிகளின் கால்தடங்களாக இருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) அதிகாலையி்ல் ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும், அச் சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்து விட்டதாகவும் அவ்வூர் மக்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற வதந்தி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற வதந்தி ஒன்று எழுந்ததாகவும், அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கியதும் அதன் பிறகு, அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மாபியாக்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற வதந்திகளைக் பரப்புவதாகவும் கூறப்படுகிறது.

 

You might also like