சிறைகளை வாடகைக்கு விடும் நெதர்லாந்து!!

நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதனால் ஏனைய நாடுகளுக்கு சிறைகளை வாடகைக்கு விட்டுள்ளது அந்த நாட்டு அரசு.

நெதர்லாந்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காலியாக உள்ள சிறைகளை வெவ்வேறு தேவைகளுக்கு நெதர்லாந்து அரசு பயன்படுத்தி வருகிறது.

உணவகமாக்கப்பட்ட நெதர்லாந்தின் சிறைச்சாலை ஒன்று

பெண்கள் சிறைச்சாலை தற்போது உணவு விடுதியாக மாறியுள்ளது. அங்குள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

குற்றவாளிகள் எண்ணிக்கை குறைந்ததால் 27 சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவை நோர்வே கைதிகளை அடைப்பதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

You might also like