புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்

புதிய அர­ச­மைப்­புக்கு முன்­ன­தா­கவே, தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கொண்டு வரப்­ப­டும் என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­கள் எதிர்­பார்ப்பு வெளி­யிட்­டுள்­ளன.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தலை நடத்­தும் நோக்­கு­ட­னேயே இந்­தச் சட்­ட­வ­ரை­வைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. புதிய அர­ச­மைப்­பில், தொகு­தி­வா­ரிப் பிர­தி­நிதித்­து­வம் 60 சத­வீ­த­மும், விகி­தா­சா­ரப் பிர­தி­நி­தித்­து­வம் 40 சத­வீ­த­மு­மா­கக் கலப்பு முறை­யில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

மாகா­ண­சபை மற்­றும் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­களை எந்த முறை­யில் நடத்­து­வது என்­ப­தில் குழப்­ப­மான நில­மையே காணப்­ப­டு­கின்­றது. அனைத்­துக் கட்­சிக­ளும் இந்த விட­யத்­தில் ஒரு­மித்த நிலைப்­பாட்டை எட்­டி­யி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் இடை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்­து­வ­தற்கு இணக்­கம் காணப்­பட்ட முறை­யி­லேயே, உள்­ளு­ராட்­சி­மன்ற மற்­றும் மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னைத் தலைமை அமைச்­சர் ஏற்­றுக் கொண்­டுள்­ளார். அத்­து­டன் அனைத்­துக் கட்­சி­க­ளும் இந்த யோச­னைக்கு உடன்­பட்­டுள்­ளன. புதிய அர­ச­மைப்­புக்கு முன்­ன­தா­கவே, உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­மாக உள்­ள­மை­யால், அந்­தத் தேர்­த­லைப் புதிய முறை­யில் நடத்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­காக உள்­ளு­ராட்­சி­மன்­றத் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு விரை­வில் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும். அதன் பின்­னர், கலப்பு முறை­யில் உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல் வெகு­வி­ரை­வில் நடத்­தப்­ப­டும் என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன.

You might also like