ஹொனொலுலு நகரில் தீ விபத்து: பலர் பாதிப்பு!!

ஹவாய் மாநிலத்தில் உள்ள ஹொனொலுலு நகரில் 36 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று தீப்பிடித்துள்ளது. பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டடம் நேற்று (வெள்ளிக்கிழமை) தீப்பிடித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து தொடர்பில் வெளியாகிய காணொளிகளில், கரும் புகை வானை நோக்கி கிளம்புவதும் எரிந்து சாம்பலான கட்டடத்தின் சில பகுதிகள் சரிந்து வீழ்வதும் பதிவாகியுள்ளன.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. உலங்கு வானூர்திகளும் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் காயமுற்றோரின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

You might also like