அரையிறுதிக்குள் ஆவரங்கால் மத்தி. புத்தூர் வளர்மதி

அள­வெட்டி மத்­தி­யின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் மற்­றும் புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழ­கம் என்­பன அரை­யி­றுதி ஆட்­டங்­க­ளுக்கு முன்­னே­றி­யுள்­ளன.

அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழ­கத்­தின் திட­லில் தொட­ரின் ஆட்­டங்­கள் அனைத்­தும் இடம்­பெற்று வரு­கின்­றன. நேற்­று­முன்­திம் இடம்­பெற்ற முதலாவது ஆட்­டத்­தில் அச்­சு­வேலி யுத் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட் டுக் கழ­கம் மோதி­யது.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:14, 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது ஆவ­ரங்­கால் மத்தி.

தொடர்ந்து இடம்­பெற்ற ஆட்­டத்­தில் இள­வாலை மத்­திய விளை­யாட்­டுக் கழ­க­மும் புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழ­க­மும் மோதின. முதலிரு செற்­க­ளை­யும் முறையே 25:14, 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று முன்னேற்றம் கண்­டது புத்­தூர் வளர்­மதி அணி.

You might also like