மைக்கல், விண்மீன் வென்றன

பருத்­தித்­துறை ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் கப­டித் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் மைக்­கல், விண்­மீன் அணி­கள் வெற்­றி­பெற்­றன.

ஐக்­கி­யத்­தின் கப­டித் திட­லில் தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் சாவ­கச்­சேரி கிங்ஸ் அணியை எதிர்த்து மைக்­கல் அணி மோதி­யது. 48:43 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் மைக்­கல் அணி வெற்­றி­பெற்­றது. ஆட்ட நாய­க­னாக மைக்­கல் வீரர் கௌத­மன் தெரி­வு­செய்­யப்­பட்­டார்.

தொடர்ந்து இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கற்­கோ­வ­ளம் உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் விளை­ யாட்­டுக் கழக அணி மோதி­யது. 81:44 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் விண்­மீன் அணி வெற்­றி­பெற்­றது. தனு­சன் ஆட்­ட­நா­ய­க­னா­கத் தெரி­வு­செய்­யப்­பட்­டார்.

You might also like