அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் பாதிப்பு – மகிந்த

அரசின், தூரநோக்கற்ற கொள்கைகளால் இலங்கை தற்போது பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் இருந்த பணத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த தவறையும் எமது அரசின் மீது சுமத்தியுள்ளனர்.

தற்போதைய அரசு தனது தவறுகளை மறைக்க கடந்த அரசு தவறு செய்தது என்று காட்டி வருகிறது. இது ஆட தெரியாதவன் மேடை கோணல் என்று கூறியது போன்றது.

அரசு அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்பட்டு வருகிறது. அரசின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நாட்டில் பொருளாதார ரீதியான கஷ்டமான நிலைமை உருவாகியதன் பின்னர் தவறுகளை என் மீது சுமத்தி, அரசு தனது தவறுகளை மறைத்துக் கொள்கின்றது. – என்றார்.

You might also like