பாரம்பரியத்தில் மாற்றமின்றி அராலி அமெரிக்கன் சிலோன் சபைக் கட்டடம் இன்று திறப்பு

பாரம்பரிய அமைப்பில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது சீரமைக்கப்பட்ட அராலி அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபைக் கட்டடம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

திருச்சபைத்தலைவர் அருள்திரு தே.தேவநேசனால் திருச்சபை மக்களின் வழிபாட்டுக்காகப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதில் மதகுருமார், சபை மக்கள், சமுகப் பெரியவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப் படுகின்றது. 1860 களில் அமெரிக்கன் சிலோன் மிஷனரிமார்களால் அராலி வடக்கில் இந்தத் திருச்சபை ஆரம்பிக்கப்பட்டது என்று சபையின் முன்னாள் தலைவர் அருள்திரு அன்னப்பா ஜெயக்குமாரன் தெரிவித்தார்.

You might also like