காரைநகரில் ஆடிப்பிறப்பு விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஆடிப்பிறப்பு விசேட நிகழ்வானது நாளை திங்கட்கிழமை பி.ப. 3.30 மணியளவில் காரைநகர் மருதபுரம் மருதமலை முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு கந்தசாமி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள், மருதமலை முருகன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

You might also like