பாடு, பரவு, பணி­செய்

தமி­ழிலே வாயூற இனிக்­கின்ற அரு­மை­யான சொற்­கட்டாக இது அமைகிறது. தெல்­லிப்­பழை துர்க்கை அம்­பாள் ஆல­யத்­தின் முன்­பாக கே.கே.எஸ்.வீதி­யில் அமைந்­துள்ள பய­ணி­கள் தரிப்­பி­டக் கட்­ட­டத்­தில் தெல்­லிப்­பழை இந்து இளை­ஞர் சங்­கத்­தின் மகு­ட­வாக்­கி­ய­மா­க இது பொறிக்­கப்­பட்­டுள்­ளது.

சங்­கத்­தின் தன்­ன­ல­மற்ற சேவை­யும், உறுப்பினர்களது அர்ப்­ப­ணிப்­பும், சமூ­க­நோக்­கும், முழுக்கால மும் பய­ணி­கள் நன்றி சொல்­லக் கூடிய பெரிய தரிப்­பி­ட­மும், நீடு வாழக் கூடி­யவை.

இலங்­கை­யிலே பெரி­ய­தும் விசா­ல­மா­ன­தும் காற்­றோட்­ட­மா­ன­தும், தூர­நோக்­கு­டை­ய­து­மான இந்­தத்­த­ரிப்­பி­ட­மா­னது இன்­னும் பல உப­கா­ரங்­க­ளோடு பேரொளி வீச வேண்டுமென அம்­பா­ளைப் பாடி வணங்கி தொண்­டுக்­குள் நிறைப்­போ­மாக.

You might also like