நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் நடுவண் அரசு பார பட்சம்

கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் நடுவண் அரசு கையாளும் பாரபட்சம் காட்டுவதால், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் தடங்கல்களை எதிர் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நடுவண் அரசால் ஒதுக்கப்படவேண்டிய நிதி வழங்கப்படாமையினால் மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான பின்னடைவுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

”வருடத்தின் அரையாண்டும் கடந்து விட்ட போதிலும் கிழக்கு மாகாண சபைக்கு இவ்வாண்டுக்கான நிதியில் ஒரு சதமேனும் வந்து சேரவில்லை.

நடுவண் அரசால் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய நிதி தாமதித்துக் கிடைப்பதால் பொதுமக்களே பல அசௌகரியங்களுக்கு உள்ளாவதால், ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை உரிய நேரத்தில் வழங்க நடுவண் அரசு ஆவன செய்ய வேண்டும்.

இந்த ஆண்டுக்குரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை விரைவில் வழங்க அரசு முன்வர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

You might also like