நிறுவனங்களுக்கு பொருட்கள் கையளிப்பு

2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கழகங்கள், சங்கங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் மதரசாக்கள் என 15 பொது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

You might also like