வறட்சியால் முல்லைத்தீவில் மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதால் பெரும் இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

விவசாயம், நன்னீர் மீன்பிடி, நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் இந்தக் குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குளங்களை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேலான நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது அமைப்புக்கள் பல கோரிக்கை விடுத்துள்ளன.

You might also like