நவம்­ப­ரில் பட்­ஜெட் முடி­வ­டைந்த பின்­னர்  உள்ளூ­ராட்சித் தேர்தல்

நவம்­பர் மாதம் வரவு – செல­வுத் திட்­டக் கூட்­டத் தொடர் முடி­வ­டைந்த பின்­ன­ரும், டிசெம்­பர் மாதம் 7ஆம் திக­திக்கு முன்­ன­ரு­மான காலப் பகு­தி­யில் உள்ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­மாக உள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் நேற்று நடை­பெற்ற அனைத்­துக் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் இதற்­கான முடிவு எட்­டப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

அல­ரி­ மா­ளி­கை­யில் நேற்று மாலை 4 மணி­யி­லி­ருந்து 6 மணி வரை, அனைத்­துக் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் மகிந்த அணி­யைத் தவிர அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளும் கலந்து கொண்­ட­னர்.

உள்ளூ­ராட்­சித் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. அதில் சில தொழில்­நுட்ப திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

நவம்­பர் அல்­லது டிசெம்­பர் மாதமே உள்­ளு­ராட்­சித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழல் இருப்­ப­தாக இதன்­போது கருத்­துத் தெரி­விக்­கப்­பட்­டது. நவம்­பர் மாதம் வரவு – செல­வுத் திட்­டக் கூட்­டத் தொடர் நடை­பெ­றும் என்­ப­தால், நவம்­பர் மாதம் வைப்­பது சாத்­தி­ய­மில்லை என்று கூறப்­பட்­டது.

ஒக்­ரோ­பர் மாதம் வைப்­ப­தற்கு, காலம் போதா­மல் உள்­ளமை சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இறு­தி­யில் டிசெம்­பர் மாதம் தேர்­தலை நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டது. இதன்­போது, டிசெம்­பர் மாதம் 7 ஆம் திகதி கல்­விப் பொதுத்­த­ரா­த­ரச் சாதா­ரண தரப் பரீட்சை ஆரம்­ப­மா­கு­வ­தால் அதற்கு முன்­னர் தேர்­தலை நடத்­த­வேண்­டும் என்று ஆணை­யா­ளர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இதன்­படி நவம்­பர் மாதம் வரவு – செல­வுத் திட்­டக் கூட்­டத் தொடர் முடி­வ­டைந்த பின்­ன­ரும், டிசெம்­பர் மாதம் 7ஆம் திக­திக்கு இடை­யி­லும் உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

You might also like