வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு

வவுனியா – தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு வடமாகாணகல்வி பண்பாட்டு அலுவலக்கள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவு உரையினை தமிழ் மணி அகளங்கள் நிகழ்த்தியுள்ளது. வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவர்கள் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலை பாடியதுடன், சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆடிக்கூழ் மற்றும் கொளுக்கட்டை பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.பி. றோஹன புஸ்பகுமார, மேலதிக அரச அதிபர் த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலர் கா.உதயராஜா, மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் வீ. பிரதீபன், மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ். எஸ். வாசன், முன்னாள் நகர உப பிரத சந்திரகுலசிங்கம், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like