உல­கச் சந்­தையை இலக்­கு ­வைத்து -புதிய எரி­பொ­ருள் விலைச் சூத்­தி­ரம் -விரை­வில் அமைச்­ச­ர­வைக்­குப் பத்­தி­ரம்!!

Get real time updates directly on you device, subscribe now.

பன்­னாட்­டுச் சந்­தை­யில் ஏற்­ப­டும் எரி­பொ­ருள் விலை மாற்­றத்­துக்­க­மைய இலங்­கை­யி­லும் எரி­பொ­ருள்­க­ளின் விலை­யைப் பேணு­வது தொடர்­பான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மொன்றை நிதி­ய­மைச்சு விரை­வில் அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

கடந்த வியா­ழ­னன்று எரி­பொ­ருள்­க­ளின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் சில மணி நேரத்­தி­லேயே அதி­க­ரிப்பு மீளப்­பெ­றப்­பட்­டது. இப்­ப­டி­யான நில­மை­யைத் தவிர்க்­கும் நோக்­கி­லேயே மேற்­படி அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரம் அமை­யு­மென்று அரச தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உல­கச் சந்­தை­யில் எண்­ணெய் விலை மாற்­ற­ம­டை­யும்­போது, உட­னுக்­கு­டன் இலங்கை விலை­யை­யும் மாற்­று­வ­தன் மூலம் இழப்பு ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்­க­மு­டி­யும் எனக் கரு­தப்­ப­டு­கின்­றது. அத்­து­டன், எரி­பொ­ருள் சூத்­தி­ரத்தை வாராந்­தம் மாற்­றி­ய­மைப்­பது தொடர்­பில் நிதி­ய­ மைச்சு கவ­னம் செலுத்­தி­யுள்­ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of