கிரிக்கெட் வீரர்கள்- ஐவருக்கு அழைப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் ஆலோசகர்களாக இணைந்து கொள்ளுமாறு முன்னணி வீரர்கள் ஐவருக்கு,விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, அழைப்பு விடுத்துள்ளார்.

நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு காரணமாக இலங்கைக் கிரிக்கெட்டிற்கான தேர்தல்களை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் சமர்ப்பித்த கடிதத்தின் அடிப்படையில், குமார் சங்கக்கார,மஹேல ஜயவர்த்தன, முத்தையா முரளீதரன், அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம ஆகியோர் ஆலோசகர்களாக இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்தையா முரளீதரனை சுழல் பந்து ஆலோசகராக இணைத்துக் கொள்ள வேண்டுமென இலங்கைக் கிரிக்கெட்டின் தெரிவுக் குழு அங்கத்தவர்கள் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of