தேர்தல் பரப்புரைப் கூட்டத்தில்- தற்கொலைக் குண்டுத் தாக்குதல்- வேட்பாளர் உள்ளிட்ட 12 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மே 31- ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 25 ஆ-ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு
பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் காயம் அடைந்தவர்களை மிட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of