வடக்கு மாகாண -பட்­ட­தா­ரி­க­ளுக்கு -நேர்­மு­கப் பரீட்சை!!

Get real time updates directly on you device, subscribe now.

வடக்கு மாகாண தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் இலங்கை ஆசி­ரி­யர் சேவை­யின் 3ஆம் வகுப்பு 1 (அ) பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை ஆள்சேர்ப்­புச் செய்­வ­தற்­கான நேர்­மு­கத்­தேர்­வும் பிர­யோ­கப் பரீட்­சை­யும் அடுத்­த­வா­ரம் நடை­பெ­ற­வுள்­ளன.

செம்­மணி வீதி, நல்­லூ­ரில் அமைந்­துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்­சில் எதிர்­வ­ரும் 17, 18ஆம் திக­தி­க­ளில் காலை 9 மணி முதல் நடை­பெ­றும் என்று மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் எஸ்.சத்­தி­ய­சீ­லன் அறி­வித்­துள்­ளார்.

இதற்­கான திறந்த போட்­டிப் பரீட்­சை­கள் கடந்த மாதம் 9ஆம் திகதி நடை­பெற்­றி­ருந்­தன. குறித்த எழுத்­துப் பரீட்­சை­க­ளில் தகைமை பெற்ற 353 பட்­ட­தா­ரி­களே நேர்­மு­கத்­தேர்­வுக்கு அழைத்­துக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

நேர்­மு­கத்­தேர்­வுக்கு தெரி­வா­னோ­ரின் விவ­ரங்­களை www.edumin.np.gov.lk எனும் முக­வ­ரி­யில் பார்­வை­யிட முடி­யும் மற்­றும் நேர்­மு­கத் தேர்­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டிய விட­யங்­களை www.np.gov.lk என்ற இணைய முக­வ­ரி­யில் பார்­வை­யி­ட­லாம்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of