மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் விமர்சித்திருப்பாரா டிலான்?

சு.க. பொதுச் செயலாளர் துமிந்த பதிலடி

மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளரை விமர்­ச­னம் செய்­தி­ருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கும் என்­பதை டிலான்­பெ­ரேரா நினைத்­துப்­பார்க்க வேண்­டும் எனச் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்­துள்­ளார்.

இரா­ஜாங்க அமைச்­ச­ரும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான டிலான் பெரேரா, அண்­மை­யில் சுமத்­திய குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அமைச்­சர் டிலான் பெரேரா அண்­மை­யில், துமிந்த திஸா­நா­யக்­க­வின் கருத்­துக்­கள் சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னவை எனக் கூறி­யி­ ருந்­தார்.

கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் ஒரு­வ­ரைப் பகி­ரங்­க­மாக இவ்­வாறு விமர்­ச­னம் செய்­வ­தன் மூலம் டிலான் பெரேரா, தனது அர­சி­யல் அனு­பவ முதிர்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்­டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி யுள்­ளார். இத­னால் எவ­ருக்­கும் எந்­த­வொரு கருத்­தை­யும் வெளி­யிட அனு­ம­தி­யுண்டு.

விமர்­ச­னங்­கள் மற்­றும் இழி­வு­ப­டுத்­தல்­கள் மூலம் தமது அர­சி­யல் பய­ணத்தை எவ­ரா­லும் தடுக்க முடி­யாது.
முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச கட்­சி­யின் தலைமை வகித்த காலத்­தில் தேசிய அமைப்­பா­ளரை விமர்­ச­னம் செய்­தி­ருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கும் என்­பதை நினைத்­துப் பார்க்க வேண்­டும்-­ – என்­றார்.

You might also like