இளைஞன் சடலமாக மீட்பு

வீரக்கெட்டிய-பஸ்மங்ஹந்திய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் உடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தங்கல்லை, பஹலகொட பிரதேசத்தில் வசித்துவந்த ரவிந்திர நிமசர காரியவன்ச (வயது-21) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரக்கெட்டிய காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like