டெங்கு ஆடைகள் விற்பனை

பதுளை பகுதியில் அண்மைக் காலமாக டெங்குத் தொற்று மற்றும் டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், “டெங்கு ஆடைகள்” என்ற பெயரில் சந்தைக்கு புதிய வகையான ஆடைகள் வந்துள்ளன.

டெங்குத் தொற்று பரவும் நிலையில் உரிய பாதுகாப்புடைய ஆடைகளை அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க கல்வி அமைச்சர் வாய்ப்பு வழங்கியிருந்தார். எனினும் அதனை சில அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், பதுளையில் விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக இவ் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது

You might also like