சாவகச்சேரியில் ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பை முன்னிட்டு சாவகச்சேரியில் இயங்கும் அரச திணைக்கள அலுவலகங்களில் நேற்று ஆடிக் கூழ் காய்ச்சி பணியாளர்கள் மகிழ்வுடன் அருந்தியதைக் அவதானிக்க முடிந்தது

அலுவலகங்களின் பணியாளர்கள் அனைவரும் இணைந்து ஆடிக்கூழ் காய்ச்சி அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கும் வழங்கினர்.

இதேவேளை தென்மராட்சி பிரதேச பாடசாலைகளிலும் நேற்று மாணவர்களுக்கு மதிய உணவாக ஆடிக்கூழ் வழங்கப்பட்டதென அதிபர்களால் தெரிவிக்கப்பட்டது.

 

You might also like