மாடு கடத்தியவர் கைது

செட்டிக்குளத்திலிருந்து, வவுனியாவிற்கு மாடுகளை கடத்திச் செல்ல முயன்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதோடு அவரால் கடத்திச் செல்லப்பட்ட மாடும், அதை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை வாகனம் ஒன்றை மறித்து பொலிஸார் சோதனையிட்டப்போது அந்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி மாடு கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட மாடு, மற்றும் குறித்த வாகனம் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு வாகனச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like